Flash News

Friends Tamil Chat

Search This Blog

Thursday 2 May 2013

கைக்குத்தல் அரிசி சாப்பிடுவதால் உண்டாகும் நன்மைகள் - health benefits of brown rice

கைக்குத்தல் அரிசி உணவை சாப்பிடுவதால் உண்டாகும் 12 நன்மைகள்

பழுப்பு அரிசி எனப்படும் கைக்குத்தல் அரிசியானது வெகு குறைவான தோல் நீக்கப்பட்டது. நெல்லின் வெளிப்புற தோலை நீக்கியப் பிறகு மிதமான பழுப்பு நிறத்தில் இருக்கும். இது தானியத்தின் சுவையுடன் வாயில் மெல்லக் கூடிய தன்மை கொண்டது. இவ்வகை அரிசி வெகுவாக தீட்டப்படாததால், மிகுந்த சத்துள்ளதாக இருக்கும். ஆனால் இதை சமைப்பதற்கு சாதாரண அரிசியை விட, சிறிது அதிக நேரம் அதிகமாகும்.


கைக்குத்தல் அரிசிச் சோறு ஒரு முழு தானிய உணவு. இதில் சத்தான வைட்டமின் பி, பாஸ்பரஸ், செலினியம், மாங்கனீசு, பொட்டாசியம், மெக்னீசியம் போன்றவை உள்ளன. மேலும் இதில் உடல் எடையைக் குறைக்கும் நார்ச்சத்து மற்றும் ஃபைட்டோ நியூட்ரியண்ட்ஸ் சத்துக்கள் (Phytonutrients) மிகுதியாக உள்ளது. இப்போது இந்த கைக்குத்தல் அரிசியை சாப்பிட்டால், என்ன நன்மைகள் கிடைக்கும் என்பதைப் பார்ப்போமா!!!


பெருங்குடல் புற்றுநோய்
கைக்குத்தல் அரிசியில் செலினியம் இருப்பதால். பெருங்குடல் புற்றுநோய் வருவதற்கான சாத்தியக்கூறுகள் குறைக்கப்படுகிறது. இந்த அரிசியில் அதிக அளவு நார்ச்சத்து இருப்பதால், புற்றுநோய் ஏற்படுத்தும் ரசாயனங்களை இரைப்பை குடல் பகுதிகளில் தங்கவிடாமல் பாதுகாக்க உதவும். இதனால் பெருங்குடல் புற்றுநோய் வராமல் தடுக்கலாம்.





மார்பக புற்றுநோய்
கைக்குத்தல் அரிசியில் உள்ள பைட்டோ நியூட்ரியண்ட்டான லிக்னான் (Phytonutrients Lignan) மார்பக புற்றுநோய் மற்றும் இதய நோய்க்கு எதிராக தற்காத்துக் கொள்ள உதவுகிறது. வயதான பெண்களிடம் நடத்தப்பட்ட ஒரு ஆய்வில் கைக்குத்தல் அரிசிச்சோறு போன்ற முழு தானிய உணவுகள் சாப்பிடும் போது enterolactone அளவுகளை, அதிகரித்து, மார்பக புற்றுநோய் அபாயத்தை குறைப்பதாக நிரூபணமாகியுள்ளது.




கொழுப்பை குறைக்கிறது
கைக்குத்தல் அரிசியின் தவிட்டில் கிடைக்கும் எண்ணெய், உடலில் உள்ள கொழுப்பை குறைக்கும் என்று அறியப்படுகிறது. இந்த அரிசியில் எல்டிஎல் (LDL) கொழுப்பை குறைக்க உதவும் நார்ச்சத்து உள்ளது.




இதய நோய்
நார்ச்சத்து அதிகமாக இருப்பதால், கைக்குத்தல் அரிசிச்சோறு, இதய நோய் அபாயத்தை குறைக்க உதவுகிறது. டெம்பிள் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கைக்குத்தல் அரிசிச்சோறு சாப்பிட்டால், இரத்த அழுத்தம் குறையும் என்று தெரிவிக்கின்றனர். மேலும் இரத்தக் குழலில் பிளேக் உருவாகும் அபாயத்தையும் குறைக்கும். இதனால் இதய நோய் வருவதை குறைக்க முடியும் என்றும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




உடல் எடையை பராமரிக்க கைக்குத்தல்
அரிசியில் அதிக நார்ச்சத்து இருப்பதால், உணவின் கலோரி அளவை கட்டுப்படுத்தி, அதிக உணவை உட்கொள்வதை தடுக்கிறது. ஹார்வர்ட் ஆராய்ச்சியாளர்கள் நடத்திய ஆய்வில், கைக்குத்தல் அரிசிச்சோறு போன்ற நார்ச்சத்து அதிகம் நிறைந்த உணவை சாப்பிட்ட பெண்களின் உடல் எடை குறைகிறது என்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.




மலச்சிக்கலை தடுக்க
இந்த அரிசியின் உயர் நார்ச்சத்தினால், இது உணவை செரிக்க பெரிதும் உதவியாக இருக்கிறது. இதனால் மலச்சிக்கலை தடுத்து, ஆரோக்கியமான குடல் இயக்கங்களை பெறலாம்.




நீரிழிவை கட்டுப்படுத்த
கைக்குத்தல் அரிசியில் உள்ள நார்ச்சத்து, இரத்த சர்க்கரை அளவை கட்டுப்படுத்தி, இரண்டாம் வகை (Type 2) நீரிழிவு நோயை சீராக்க பயனுள்ளதாக இருக்கும்.


ஆரோக்கியமான எலும்புகள்
கைக்குத்தல் அரிசியில் ஆரோக்கியமான எலும்புகளை பராமரிக்க தேவையான மெக்னீசியம் அதிக அளவில் உள்ளது. ஒரு கிண்ணம் கைக்குத்தல் அரிசிச் சோற்றில் ஒரு நாளைக்கு பரிந்துரைக்கப்படும் மெக்னீசியம் அளவில் கிட்டத்தட்ட 21% இருக்கிறது. மேலும், மெக்னீசியத்தால், எலும்புகள் கால்சியம் மற்றும் பிற அத்தியாவசிய ஊட்டச்சத்தினை உறிஞ்சுகிறது.




ஆஸ்துமா
மெக்னீசியம் நிறைந்த கைக்குத்தல் அரிசி, ஆஸ்துமாவைக் குறைக்கிறது. பல ஆய்வுகள், கைக்குத்தல் அரிசியில் உள்ள மெக்னீசியம், நோயாளிகளிடம் உள்ள ஆஸ்துமாவின் தீவிரத்தை குறைக்க உதவும் என்று தெரிவிக்கின்றன. மேலும் இந்த அரிசியில் உள்ள செலினியம், ஆஸ்துமவிற்கு எதிரான நன்மை தரும்.




பித்தக்கற்கள்
கைக்குத்தல் அரிசி போன்ற கரையாத நார்ச்சத்து அதிகம் உள்ள உணவுகளை உட்கொள்வதால் பெண்களுக்கு பித்தக்கற்கள் உருவாதலை குறைக்க உதவுகிறது என்று இரப்பை குடலியலுக்கான அமெரிக்க இதழில் வெளியான ஒரு ஆய்வு கூறுகிறது,




ஆரோக்கியமான நரம்பு மண்டலம்
கைக்குத்தல் அரிசி, ஆரோக்கியமான நரம்பு மண்டலத்திற்கு தேவையான மாங்கனீசு நிறைந்தது. இதிலுள்ள ஊட்டச்சத்துகள் கொழுப்பு அமிலங்களை உருவாக்கி, பாலியல் ஹார்மோன்களை உற்பத்தி செய்கிறது.




உணவு முறை தேவைகள்
உணவு முறை வழிகாட்டி நாளொன்றுக்கு முழு தானியங்கள் 3 சேவைகள் உட்கொள்ள பரிந்துரைக்கிறது. ஒரு 1/2 கிண்ணம் கைக்குத்தல் அரிசிச்சோறு, அந்த மூன்று சேவைகளில் ஒன்றிற்கு சமம். அதனால் தினசரி உணவின் ஊட்டச்சத்து தேவைகளை பூர்த்தி செய்ய கைக்குத்தல் அரிசிச்சோறு ஒரு நல்ல உணவு.




Top 10 Health Benefits of Brown Rice


Brown rice is better for you than white — most of us know that! It's The majority of consumers typically choose white rice over brown rice because of the difference of appearance. While it's true white rice looks so much more delicious than brown rice, it doesn't mean it's the healthier alternative. According to a study conducted by the American Journal of Clinical Nutrition, brown rice is the top choice in terms of both nutritional and other inherent healthy benefits.

Why Brown Rice?
Brown rice is the "unrefined" version of white rice. Before white rice went through the refining process, it at one time looked exactly like brown rice. Brown rice, unlike white rice, still has the side hull and bran, which renders quicker cooking times and makes it easier to digest as it's much "lighter" in the in the stomach.

The side hulls and brans provide "natural wholeness" to the grain and are rich in proteins, thiamine, calcium, magnesium, fiber, and potassium. For those trying to lose weight or those suffering from diabetes, brown rice can prove a healthful staple given its low glycemic rating which helps reduce insulin spikes.

Unfortunately, all white rice packaging has a label that reads "enriched." Since white rice has been stripped of iron, vitamins, zinc, magnesium and other nutrients during the refining process, manufacturers must add unnatural fortifications in the form of synthetic vitamins and iron so it can be marketed to the public as a "nutritious food." Although white rice is fortified, it still doesn't reach the minimum nutritional requirements for one serving of food as specified by the FDA. The healthy benefits of brown rice are listed below.

1. Rich in Selenium
Brown rice is rich in selenium which reduces the risk for developing common illnesses such as cancer, heart disease and arthritis.
2. High in Manganese
One cup of brown rice provides 80% of our daily manganese requirements. Manganese helps the body synthesize fats. Manganese also benefits our nervous and reproductive systems.
3. Rich in Naturally-Occurring Oils
Naturally occurring oils are beneficial for the body as these healthful fats help normalize cholesterol levels.
4. Promotes Weight Loss
The fiber content of brown rice keeps bowel function at it's peak since it makes digestion that much easier. Brown rice is the perfect addition to the daily diet for those seeking bowel regularity. In addition, brown rice also makes the tummy feel full which translates to smaller meal portions.
5. Considered Whole Grain
Brown rice is considered a whole grain since it hasn't lost its "wholeness" through the refinement process. Wholes grains are proven to reduce the buildup of arterial plaque and reduce the risk of heart disease and high cholesterol.
6. Rich in Anti-Oxidants
This is one of the best kept secrets regarding brown rice. We usually associate anti-oxidant rich foods with blueberries, strawberries and other fruits and vegetables. The antioxidant capacity of brown rice is right up there with these super stars.
7. High in Fiber
Brown rice is high in fiber and on top of the list for foods that can help prevent colon cancer. This can be attributed to the high levels of fiber naturally contained in brown rice. These fibers attach to substances that cause cancer as well as to toxins in the body, thus eliminating them and keeping them from attaching to the colon wall.
8. A Slow-Release Sugar
Brown rice helps stabilize blood sugar levels; therefore, it's an excellent food choice for those suffering from diabetes. Studies show that those who consume one half cup of brown rice daily reduce their risks of developing diabetes by 60%. On the other hand, those who consume white rice regularly increase their chances of developing diabetes 100 fold.
9. Perfect Baby Food
Brown rice cereal or brown rice itself is the perfect baby's first food due to the dense natural nutrition and fiber it contains. This is a much better choice than refined white rice cereal products as rapidly growing babies and toddlers require nutrient rich diets to help maintain rapid growth cycles.
10. Candida Yeast Infections
Brown rice is the perfect adjunct for candida yeast infection treatmentsgiven that high glycemic and otherwise sugary/starchy foods are prohibited during most candida treatment protocols. The natural digestibility of brown rice coupled with the high fiber content can help sensitive digestive systems heal from an overgrowth of candida organisms.

Finally, brown rice is simply delicious and a fantastic staple for both vegetarian and vegan diets. Brown rice can be used as a white rice alternative in most vegetarian recipes and provides a full, rich and somewhat nutty flavor. Brown rice flour can be used for vegetarian pancakes, breads and other baked goods. All in all, brown rice is clearly the healthy choice.

Dr. Linda Kennedy MS SLP ND is an avid animal activist and nature lover. She owns a 10,000 square foot state of the art nutritional laboratory where she produces nutritional health supplements that are free of animal products.

  • For lots of recipes using brown rice, explore our listing of Brown Rice Recipes.
  • For lots more features on healthy lifestyle, please explore VegKitchen's Healthy Vegan Kitchen page.
  • Here are more of VegKitchen's Natural Food Guides.

Thanks

1 comment: