Flash News

Friends Tamil Chat

Search This Blog

Wednesday 19 June 2013

தம்பதிகளுக்கான பொழுதுபோக்குகள் - hobbies for couples

தம்பதிகளுக்கான 10 பொழுதுபோக்குகள்

திருமணம் எனும் பந்தம் உருவாகும் போது, நாம் ஒரு புது வாழ்வில் அடியெடுத்து வைக்கிறோம். அந்த வாழ்க்கை மகிழ்ச்சியாகவும், வெற்றிகரமாகவும் அமைய வேண்டும் என்பது அனைவரின் விருப்பமாகும். தாம்பத்திய உறவு வெற்றிகரமாக அமைய வேண்டும் என்றால் கணவன் மனைவிக்கு இடையே நல்ல உறவு நீடிக்க வேண்டும., இதை உறவு என்று சொல்வதை விட காதல் என்று சொல்லலாம். அதற்கு ஒருவருக்கொருவர் நன்றாக புரிந்து கொள்ள வேண்டும். மேலும் அன்பை பரிமாறிக் கொள்ள வேண்டும். இந்த நல்ல புரிதலுக்கு இருவரும் சேர்ந்து நிறைய நேரத்தை செலவிட வேண்டும்.


இருவரின் உறவுக்கு இடையே காதல் உணர்வு பொங்குவதற்கு பல பொழுதுபோக்குகள் உள்ளன. அதை முயற்சி செய்வது என்பதே புதுமை தான். இது புதிதான அனுபவத்தை தருவதோடு, புதிதாக பலவற்றை கற்றுக் கொடுக்கும். மேலும் குதூகலத்தை ஏற்படுத்தி இருவருக்கு இடையில் காதலை இன்னும் வளரச் செய்யும். இப்போது தம்பதிகளுக்கான சில ஆரோக்கியமான மற்றும் காதல் உணர்வை துண்டும் சில பொழுதுபோக்குகளைப் பார்ப்போமா


நடனம்
வாழ்க்கைத் துணையோடு நேரத்தை செலவிட நடனம் சிறந்த வழியாகும். இது இருவரின் கெமிஸ்ட்ரியை மேம்படுத்தும். மேலும் மனதுக்கு சந்தோஷத்தை அளித்து, உடம்பையும் கட்டுக்கோப்பாக வைக்க உதவும். சல்சா (Salsa), ஜைவ் (Jive), ரும்பா (Rumba), டாங்கோ (Tango) போன்ற நடனத்தில் எது வேண்டுமானாலும் முயற்சி செய்யலாம்.



சமைப்பது
சமைப்பது ஒரு கலை. அந்த கலையை துணையோடு சேர்ந்து வித விதமாக சமைத்து பார்க்கலாம். இதனால் இருவரும் நேரத்தை ஒன்றாக செலவிடலாம். வேண்டுமெனில் இணையதளத்தில் தேடி பார்த்து புது வகை உணவு வகைகளை சமைக்கலாம். மனதுக்கு அமைதி தரும் இந்த பொழுதுபோக்கில் மூழ்கி போவீர்கள்.



புகைப்பட கலை
நினைவுகளை சிறைப்படுத்தும் சிறந்த வழி புகைப்படங்களே. ஏன் இருவரும் புகைப்பட கலையில் ஈடுபடக்கூடாது? ஒரு கருப்பொருள் கொண்டு அதன் வழி புகைப்படங்களை எடுத்து மகிழுங்கள். சமயத்தில் இருவரும் ஜோடியாக சேர்ந்து படங்களை எடுத்து சந்தோஷப்படுங்கள், இந்த படங்களை பார்க்கும் போது, கண்டிப்பாக காதல் உணர்வு பொங்கும்.



மெழுகுவர்த்தி
மெழுகை உருக்கி, அதற்கு ஒரு வடிவம் கொடுத்து, வர்ணம் பூசி, புது புது வடிவமைப்பில் மெழுகுவர்த்தி செய்வது ஒரு கலை. ஓய்வு கிடைக்கும் நேரத்தில் வீட்டிலேயே மெழுகுவர்த்தி செய்து, அந்த மெழுகுவர்த்தியை பயன்படுத்தவும் செய்யலாம். இல்லையென்றால் இருவருக்கும் இடையே தகவல் பரிமாற்றத்துக்காகவும் பயன்படுத்தலாம்.



புத்தகம்
இருவருக்கும் புத்தகம் படிப்பதில் ஆர்வம் இருந்து, படித்ததை பகிர்ந்து கொள்ளவும் ஆர்வம் இருந்தால், இந்த பொழுதுபோக்கு உங்களுக்காக தான். படுக்கப் போகும் முன் இருவரும் ஒருவருக்கொருவர் புத்தகத்தை படித்து கருத்துக்களை பரிமாறிக்கொள்ளவும்.



விளையாட்டு
விளையாட்டு நம்மை ஆரோக்கியத்தோடு வைப்பது மட்டுமல்லாது, மனதுக்கு சந்தோஷத்தையும் கொடுக்கும். துணையோடு சேர்ந்து விளையாடுவதை விட, வேறு என்ன சிறந்ததாக இருக்க முடியும். அதிலும் இறகு பூ பந்தாட்டம், நீச்சல், கூடைப்பந்து, டேபிள் டென்னிஸ், கேரம், கோல்ஃப் போன்ற விளையாட்டுக்களை விளையாடலாம்.



தோட்டக்கலை
வாழ்க்கைத் துணையோடு சேர்ந்து ஈடுபடும் சுவாரஸ்யமான ஒரு பொழுதுபோக்கு தான் தோட்டக்கலை. வீட்டின் வெளியே ஒரு தோட்டம் ஒன்றை உருவாக்கி, அங்கே தோட்டக்கலையை பயிற்சி செய்யலாம். பல வகையான அலங்கார செடிகளை வளர்த்து தோட்டம் பூத்து குலுங்குவதை சேர்ந்து ரசிக்கவும்.



திரைப்படம்
நம்மை மகிழ்ச்சியில் ஆழ்த்த இந்த ஒரு பொழுதுபோக்கு போதும். வீட்டில் இருவரும் சேர்ந்து படம் பார்க்கலாம். இதற்காக தனியாக எந்த முயற்சியும் எடுக்க தேவையில்லை. இணையதளத்தில் கூட படங்களை பார்த்து மகிழலாம்.



கேனோயிங்
கேனோயிங் என்பது சிறிய படகை ஆற்றில் ஓட்டுவது. இது ஒரு ஓய்வு நேர பொழுதுபோக்காகும். இது மன அமைதியை தரும். எனவே துணையோடு சேர்ந்து இந்த பிரமாதமான செயலில் இறங்கலாம்.



சிப்பி மற்றும் சங்கு சேர்த்தல்
கடற்கரையிலிருந்து பல வகை சங்கு மற்றும் சிப்பிகளை சேர்ப்பதும் ஒரு வகை பொழுதுபோக்கே. இதுவும் அமைதியான ஒரு பொழுதுபோக்கு. சொல்லப்போனால் கடற்கரையில் சேர்ந்து நேரம் செலவிட அதிக வாய்ப்பை அளிக்கும். இவைகளை நினைவுப் பொருட்களாக பாதுகாத்தால் என்றும் பசுமையோடு இருக்கும்.


10 Hobbies For Couples

Spice up the romance in your relationship by trying different and new hobbies together. This will not only get your creative side out but it will teach you something new, be lots of fun and contribute significantly to the romance level between both of you. Here are different hobbies you can indulge in together:

1. Dancing
Dancing is a great way to spend time with your partner. It improves the chemistry between couples, is lots of fun and also keeps you fit. You can try various ballroom styles like Salsa, Jive, Slow Waltz, Lindy Hop, Cha Cha Cha, Rumba, Viennese Waltz, Tango, Foxtrot, etc.

2. Cooking
Cooking can be really relaxing. You can try different recipes with your partner. Surf the internet for different kinds of recipes to try. The best part is the two of you will have a great time together, cooking also will be fun and you get to taste something different. You can even try something interesting like sugar craft. It refers to making various designs with the use of sugar. It is often prepared for the icing on cakes. This hobby is very relaxing and gets you totally absorbed into it.

3. Photography
They say photos are the best way to cage memories. Why don't the two of you indulge in something as interesting as photography. Choose a theme and then go for it. This way, at times, you could just take pictures of yourselves.

4. Candle making
Melting wax, molding it, adding color, shaping and designing the candle is an art. Use your spare time by making candles for your home, together. You can get creative and make something for each other. Or you could use wax and mold it into a message for each other.

5. Reading

Whoever said only little children enjoy bedtime stories? In case the two of you enjoy reading and share the same interests in the kinds of books you love to read, this one is for you. The two of you can read out books to each other, before going to bed.

6. Sports
Sports not only keep you fit but they can be lots of fun. What can be better than playing with your better half? Try different kinds of sports, depending on your common tastes like badminton, swimming, basketball, table tennis, carrom, bowling, golfing, etc.

7. Gardening
Gardening is a very interesting hobby to indulge into with your partner. You can build a special garden outside your house and practice gardening right there. You can grow various ornamental plants and watch your love grow as your garden blossoms.

8. Watching Movies

This is one hobby enough to keep you entertained at any point in time. Watch movies together with your partner at home. You don't need to go out of your way to do this. You can search online for the best of movies. Or if you wish, you can also choose from several holiday classics.

9. Canoeing
Canoeing refers to paddling a small narrow boat on the river. It is a leisure activity and can have a very soothing effect on your mood. This is an amazing activity to practice along with your partner.

10. Shell collecting
Shell collecting, as the name suggests, refers to collecting different kinds of shells by the beach and preserving them. This is a very relaxing hobby. In fact, it gives you more time to spend by the beach together. The shells can be preserved as a memento of all the wonderful times the two of you have together.

Share your comments here

Thanks

No comments:

Post a Comment