Flash News

Friends Tamil Chat

Search This Blog

Sunday 31 May 2015

அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனை இருக்கிறதா ? Lifestyle Changes To Reduce Acidity

இன்றைய காலக்கட்டத்தில் பத்தில் எட்டு பேர் அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனையை சந்திக்கின்றனர். இதற்கு முக்கிய காரணம் ஆரோக்கியமற்ற உணவுப் பழக்கவழக்கங்கள் தான். மேலும் தொடர்ச்சியாக காரமான உணவுகளை உட்கொண்டு வருவதும் மற்றொரு காரணம். கர்ப்பிணிகள் இந்த பிரச்சனைக்கு அதிகம் ஆளாவார்கள்.

மேலும் இந்த பிரச்சனையை சரிசெய்ய ஆன்டாசிட் மாத்திரையை சாப்பிட்டு வருவோம். ஆனால் இப்படியே எப்போதும் ஆன்டாசிட் மாத்திரையை எடுத்து வந்தால், அதனாலேயே நிறைய பக்க விளைவுகளை சந்திக்கக்கூடும்.

எனவே அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சல் பிரச்சனைக்கு தீர்வு காண வாழ்க்கை முறையில் சிறு மாற்றங்களை கொண்டு வர வேண்டும். சரி, இப்போது அந்த மாற்றங்கள் என்னவென்று பார்ப்போமா!!!

சிட்ரஸ் பழங்கள் 
சிட்ரஸ் பழங்களில் உள்ள அசிட்டிக் ஆசிட், அசிடிட்டி மற்றும் நெஞ்செரிச்சலை மேலும் அதிகரிக்கும். எனவே ஆரஞ்சு, திராட்சை, எலுமிச்சை போன்றவற்றை சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும்.

காரமான மற்றும் ஜங்க் உணவுகள் 
காரமான உணவுகள் மற்றும் சமோசா, பர்கட், பிட்சா போன்ற உணவுப் பொருட்களை அதிகம் சாப்பிடுவதைத் தவிர்க்க வேண்டும். மேலும் சாக்லேட், கேக் போன்றவற்றையும் அதிக அளவில் சாப்பிடக்கூடாது. ஏனெனில் இவையும் அசிடிட்டியை ஏற்படுத்தும்.

அளவுக்கு அதிகமாக சாப்பிடுவது 
ஒரே நேரத்தில் அளவுக்கு அதிகமாக சாப்பிட்டால், செரிமான மண்டலத்தினால் உணவுகளை செரிக்க முடியாமல் போய், அதிகமான அமில உற்பத்தி ஏற்பட்டு, அதனால் நெஞ்செரிச்சல் மற்றும் அசிடிட்டி ஏற்படக்கூடும். எனவே ஒரே நேரத்தில் அதிகமாக உட்கொள்ளாமல், அளவாக பலமுறை போதிய இடைவெளி விட்டு சாப்பிடுங்கள்.


சாப்பிட்டவுடன் தூங்குவது 
சிலர் உணவை உட்கொண்ட உடனேயே தூங்குவார்கள். இப்படி தூங்கினால் செரிமான மண்டலத்தின் செயல்பாடு குறைந்து, செரிமான பிரச்சனைகளான அசிடிட்டி போன்றவை ஏற்படக்கூடும்.


உடல் பருமன் 
உடல் அளவுக்கு அதிகமான எடையுடன் இருந்தாலும், அசிடிட்டி வரும் வாய்ப்பு உள்ளது. எனவே கண்ட உணவுகளை உட்கொண்டு உடல் எடையை அதிகரிக்க வேண்டாம்.


தண்ணீர் சிறந்த தீர்வு 
உடலில் நீர்ச்சத்து குறைவாக இருந்தால், அமிலத்தின் அளவு அதிகரித்து, அதனால் நெஞ்செரிச்சல் ஏற்படும். எனவே தண்ணீர் அதிகம் குடிக்க வேண்டும்.

காப்ஃபைன் பானங்கள் 
காப்ஃபைன் பானங்களான காபி, டீ, கோலா போன்றவற்றை அசிடிட்டி இருக்கும் போது தவிர்க்க வேண்டுமென்று நிபுணர்கள் கூறுகின்றனர். ஏனெனில் காப்ஃபைன் பானங்கள் pH அளவை அதிகரித்து, அசிடிட்டியை ஏற்படுத்தும். எனவே காப்ஃபைன் பானங்களை அதிக அளவில் குடிப்பதை தவிர்த்திடுங்கள்.


ஆல்கஹால் 
ஆல்கஹால் அசிடிட்டியை அதிகப்படுத்தும். எனவே ஆல்கஹால் குடிக்கும் பழக்கம் இருந்தால், அதனை உடனே நிறுத்துங்கள். இல்லாவிட்டால் நிலைமை மோசமாகும்.

புகைப்பிடித்தல் 
சிகரெட்டில் உள்ள நிக்கோட்டின் வயிற்றில் உள்ள படலத்தில் எரிச்சலை ஏற்படுத்தும். இந்த எரிச்சல் அப்படியே அமில உற்பத்தியை அதிகரித்துவிடும். எனவே புகைப்பிடிக்கும் பழக்கத்தை கைவிடுங்கள்.


தவறான படுக்கும் நிலை
அசிடிட்டி ஏற்படுவதற்கு மற்றொரு காரணம் இரவில் படுக்கும் நிலையும் எனலாம். நேராக படுப்பதன் மூலம் அசிடிட்டி பிரச்சனையை தொடர்ந்து ஏற்படும் நெஞ்செரிச்சலில் இருந்து நிவாரணம் கிடைக்கும். எனவே அசிடிட்டி இருந்தால் வாழ்க்கை முறையில் மாற்றத்தைக் கொண்டு வர வேண்டியது அவசியம்.


Lifestyle Changes To Reduce Acidity

Bouts of heartburn and acidity are common problems faced in 8 out of 10 people. Medically known as gastro-esophageal reflux disease-GERD, this uncomfortable problem is common in people who follow unhealthy eating patterns. 

The constant intake of spicy food too is another add on to acidity and heartburn. At the time of pregnancy, women face this problem almost everyday. This is due to the type of food craving and the acids present in the ingredients that are used especially spicy junk food.

In times like this, the only way to put an end to acidity is popping an antacid pill. Though you will find utmost relief by popping in a tablet, in time they have side effects. Therefore, to keep ourselves healthy and to stop acidity and heartburn home remedies and a change in lifestyle is very important. 

Here are some changes you need to make in your lifestyle, if you want to get rid of acidity and heartburn issues, take a look at some of the changes you need to make today.

Citrus Foods 
If you have the habit of binging on citrus fruits, think again as it can increase the acid levels in the body. Try avoiding fruits like oranges, grapefruit and lemons if you have recurring acidity problems.

Spice & Nice 
Change your lifestyle habits today but not indulging in foods that are spicy. Samosas, burgers are two main culprits of heartburn. Desserts like chocolate, doughnuts and cakes too can cause acidity problems.

The Cause Of Overeating 
The habit of overeating increases the load on the digestive system which causes excess acid production leading to heart burn. Instead, opt for smaller portions of meals and spread them in a 2 to 3 time gap.

Hitting The Sack 
Many have the habit of eating a heavy meal and hitting the sack soon after. This is one bad habit in your lifestyle which needs to change immediately. When you sleep right after a meal the entire body functions slow down which results in digestion problems like acidity.

Overweight Issues 
Being overweight is another reason why acidity creeps in and causes an uncomfortable feeling. Apart from acid reflux, being overweight also has additional problems to the human body.

Water Does The Trick 
When you are dehydrated the acid levels in the body increase thus causing heart burn. Therefore, water is the best and natural remedy to treat and get rid of acid reflux. Water also helps in active digestion and overall health benefits too.

Caffeinated Drinks 
There is a reason why experts state to avoid caffeinated beverages like tea, coffee, cola if your suffering from acidity and heart burn. It is these caffeinated beverages which change gastric pH and cause reflux in the body.

Alcohol Causes Problems 
Alcohol is one of the main causes to increase acidity risk. Alcohol cause direct damage to the gastric mucosa which also relaxes the esophageal sphincter and causes the acid to enter into the esophagus.

Smoking Causes Problems 
Cigarettes have nicotine which irritates the stomach linings. This irritation also induces relaxation of the esophageal sphincter and stimulates acid production in the body. Getting rid of this bad habit is the next best step to avoid acidity.

The Wrong Position 
One of the main causes of acidity is the way you sleep at night. Sleeping with the head elevated can relieve acidity symptoms followed by heart burn. Therefore, change this lifestyle pattern to avoid acidity.


For More Articles visit http://NanbanTamil.blogspot.com


No comments:

Post a Comment